search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இறந்ததாக 2 முறை போலி சான்றிதழ் பெற்று ரூ.1.1 கோடி இன்சூரன்ஸ் பணம் மோசடி
    X

    இறந்ததாக 2 முறை போலி சான்றிதழ் பெற்று ரூ.1.1 கோடி இன்சூரன்ஸ் பணம் மோசடி

    • போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
    • இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

    இறந்ததாக போலி சான்றிதழ் வாங்கி 1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

    மும்பையில் 2021 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் மரணமடைந்துள்ளார். கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது மகன் தன்ராஜ் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுள்ளார்.

    இதே இறப்பு சான்றிதழை பயன்படுத்தி இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 25 லட்ச ரூபாயை தன்ராஜ் பெற்றுள்ளார்.

    பின்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்துள்ளார். பவித்ராவின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது கணவர் ரோகித் 24.2 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 30 ஆம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்த போது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்தது.

    இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் இது சம்பந்தமாக போலீசில் புகாரளித்தது.

    இந்த வழக்கின் விசாரணையில், 2 தனித்தனி ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காஞ்சன் ராய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பது தெரிய வந்தது.

    மேலும், காஞ்சன் ராய், பவித்ரா என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.

    இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த மோசடியில் இன்சூரன்ஸ் நிறுவனம், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×