என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜி20 மாநாடு: டெல்லியில் நடமாடும் போலீஸ் நிலையம்
- பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
- நடமாடும் போலீஸ் நிலையம், ஜி-20 மாநாடு முடிவடைந்தபிறகும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக ஒரு வேன், போலீஸ் நிலைய வடிவமைப்பில் மாற்றப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் உட்காருவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்றும் போலீசாருடன் சாதாரண போலீஸ் நிலையம் போல இது செயல்படும். இதில் இன்டர்நெட் வசதி மற்றும் மாநாட்டின் முக்கிய செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் இது, எங்காவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு உடனடியாக இந்த போலீஸ் நிலையம் சென்றடையும். இந்த நடமாடும் போலீஸ் நிலையம், ஜி-20 மாநாடு முடிவடைந்தபிறகும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.