search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாளை முதல் 10ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு ரெயில் சேவை -டெல்லி மெட்ரோ அறிவிப்பு
    X

    நாளை முதல் 10ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு ரெயில் சேவை -டெல்லி மெட்ரோ அறிவிப்பு

    • டெல்லி பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.
    • செப்டம்பர் 8 முதல் 10 வரை அதிகாலை 4 மணி முதல் டெல்லி மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது.

    மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. 28 அடி உயரம், 21 அடி அகலம், 25 டன் எடை கொண்ட இந்த சிலை ரூ.10 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை போர் விமானங்கள் உள்பட வான்வழியிலான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜி20 மாநாடு நடைபெறும் செப்டம்பர் 8 முதல் 10 வரை அதிகாலை 4 மணி முதல் ரெயில் சேவை

    தொடங்கும் என டெல்லி மெட்ரோ அறிவித்துள்ளது.

    காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின்படி இயங்கும் என தெரிவித்துள்ளது.

    வழக்கமாக அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் மெட்ரோ ரெயில் சேவை ஜி20 மாநாட்டை முன்னிட்டு, அதிகாலை 4 மணி முதல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×