search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு இந்தியா புறக்கணிக்கப்பட்டது - கஜேந்திர சிங்
    X

    "காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு இந்தியா புறக்கணிக்கப்பட்டது" - கஜேந்திர சிங்

    • ராய்பூரில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கலந்துகொண்டார்.
    • பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாக அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராய்பூரில் உள்ள ராமர் கோவிலில் தூய்மை இயக்கத்தில் இன்று பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு இந்தியா புறக்கணிக்கப்பட்டதாகவும், வடகிழக்கு இந்தியாவை பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிக்கும் சதிகள் நடைபெற்றதாகவும் கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,

    ராய்பூரில் தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பின்னர், மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பிவிடிஜி கிராமத்திற்கு செல்ல இருக்கிறார். அங்கு மாவட்ட பஞ்சாயத்து வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பிரதான் மந்திரி ஜன்மம்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நயா ராய்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரது தலைமையில் நடைபெறும் ஜல் ஜீவன் மிஷன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு ராய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    Next Story
    ×