என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![வன்முறை பாதித்த பகுதிக்குச் செல்லமுயன்ற அரியானா காங்கிரஸ் தூது குழு தடுத்து நிறுத்தம் வன்முறை பாதித்த பகுதிக்குச் செல்லமுயன்ற அரியானா காங்கிரஸ் தூது குழு தடுத்து நிறுத்தம்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/08/1929236-cong.webp)
X
வன்முறை பாதித்த பகுதிக்குச் செல்லமுயன்ற அரியானா காங்கிரஸ் தூது குழு தடுத்து நிறுத்தம்
By
மாலை மலர்9 Aug 2023 2:45 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரியானா வன்முறையில் 2 ஊர்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
- வன்முறை தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது.
கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையில் 2 ஊர்க்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 142 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள எதிர்கட்சியான அரியானா காங்கிரஸ் சார்பில் 10 பேர் கொண்ட தூதுக்குழு அமைக்கப்பட்டு, வன்முறை நடந்த நூ பகுதிக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டது.
அவர்கள் நேற்று அங்கு செல்ல முயன்றபோது ரோஜ்கா மியோ கிராமத்தின் எல்லையில் அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
Next Story
×
X