search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2022-ம் ஆண்டில்அதிக நன்கொடை வழங்கியவர் ஷிவ் நாடார்: எவ்வளவு தெரியுமா?
    X

    எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார்

    2022-ம் ஆண்டில்அதிக நன்கொடை வழங்கியவர் ஷிவ் நாடார்: எவ்வளவு தெரியுமா?

    • 2-வது இடத்தை விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி பெற்றிருக்கிறார்.
    • முகேஷ் அம்பானி ரூ.411 கோடி வழங்கி 3-வது இடத்தில் உள்ளார்.

    புதுடெல்லி :

    'இடெல்கிவ் ஹுருன் இந்தியா' அமைப்பு உலக பணக்காரர்கள் பட்டியல், இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டின் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் சிறந்த நன்கொடையாளராக எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் தேர்வு பெற்றிருக்கிறார். இவர் ஓராண்டில் ரூ.1161 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டு உள்ளது.

    2-வது இடத்தை விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி பெற்றிருக்கிறார். இவர் ரூ.484 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். முகேஷ் அம்பானி ரூ.411 கோடி வழங்கி 3-வது இடத்திலும், குமார் மங்கலம் பிர்லா குடும்பத்தினர் ரூ.242 கோடி வழங்கி 4-வது இடத்திலும் உள்ளனர். ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த சுஷ்மிகா சுப்ரோடோ பாக்சி மற்றும் மின்ட் டிரீ நிறுவனத்தின் ராதா என்.எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் தலா ரூ.213 கோடி வழங்கி 5-வது இடத்தில் உள்ளனர்.

    அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.190 கோடி வழங்கி 7-வது இடத்தில் உள்ளார். இவர் அதிகமாக பேரிடர் நிவாரணத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளார். வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் ரூ.165 கோடி வழங்கி 8-வது இடத்திலும், இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலேகனி ரூ.159 கோடி வழங்கி 9-வது இடத்திலும், 'எல் அன்ட் டி' குழும தலைவர் ஏ.எம்.நாயக் ரூ.142 கோடி வழங்கி 10-வது இடத்திலும் உள்ளனர்.

    Next Story
    ×