என் மலர்
இந்தியா

மணிப்பூர் கலவரம் - உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
- மணிப்பூரில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
- இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளிடம் கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






