search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களவை 140 கோடி மக்களின் விருப்ப மையம் - பிரதமர் மோடி
    X

    மக்களவை 140 கோடி மக்களின் விருப்ப மையம் - பிரதமர் மோடி

    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் ஜாகருக்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.
    • ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தபோதுதான் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அவர் கூறுகையில்,

    * அவையின் இருக்கையில் ஓம் பிர்லா அமர்ந்திருப்பது இந்த அவையின் அதிர்ஷ்டம்.

    * தேசத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இந்த அவை உங்களுக்கு துணை நிற்கும்.

    * 18-வது மக்களவை பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருவதை நாம் பார்க்கிறோம்.

    * காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் ஜாகருக்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.

    * 2-வது முறை சபாநாயகராக உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு மிகப்பெரியது.

    * எதிர்காலத்திலும் எங்களை வழிநடத்த உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

    * 17-வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

    * ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தபோதுதான் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    * 3 புதிய குற்றவியல் நடைமுறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

    * மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    * 17-வது மக்களவையில் ஓம் பிர்லாவின் பங்களிப்பு அளப்பரியது.

    * அவையில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை ஓம் பிர்லா மேற்கொண்டார்.

    * ஓம் பிர்லா தலைமையில் ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    * வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை அடைய தேசம் சரியான பாதையில் செல்கிறது.

    * மக்களவை என்பது வெறும் நான்கு சுவர் அல்ல 140 கோடி மக்களின் விருப்ப மையம்.

    * கொரோனா போன்ற மிக சிக்கலான கால கட்டங்களிலும் அவையை திறம்பட நடத்தினார் என்று கூறினார்.

    Next Story
    ×