என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![நான் ஸ்பைடர்மேன் என்று பால்கனியில் இருந்து கீழே குதித்த 3ம் வகுப்பு மாணவன் நான் ஸ்பைடர்மேன் என்று பால்கனியில் இருந்து கீழே குதித்த 3ம் வகுப்பு மாணவன்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/21/1919263-23.webp)
நான் ஸ்பைடர்மேன் என்று பால்கனியில் இருந்து கீழே குதித்த 3ம் வகுப்பு மாணவன்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- பள்ளி மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உரையாடி உள்ளனர்.
கான்பூர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்பைடர்மேனாக மாறி பள்ளி பால்கனியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் பாபுபூர்வா காலனியில் வசிக்கும் ஆனந்த் பாஜ்பாயின் 8 வயது மகன் விராட், வீரேந்திர ஸ்வரூப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 19ஆம் தேதி பள்ளி மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உரையாடி உள்ளனர். ஸ்பைடர்மேனின் உரையாடலைக் கேட்ட விராட் பால்கனிக்கு வந்து 'நான் ஸ்பைடர்மேன் வருகிறேன்' என்று கூறிக்கொண்டே 16 அடி உயரத்தில் இருந்து குதித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த விராட் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.