search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முறைகேடு சர்ச்சையில் சிக்கிய பூஜா கேத்கர் ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கம் - மத்திய அரசு
    X

    முறைகேடு சர்ச்சையில் சிக்கிய பூஜா கேத்கர் ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கம் - மத்திய அரசு

    • பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
    • இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்தார்

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஐஏஎஸ் பறிச்சி பெண் கலெக்டராக இருந்த பூஜா கெத்கர் காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் கலெக்டர் அறையை பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் தான் மாற்றுத்திறனாளி என போலியான சான்றிதழை சமர்ப்பித்தும் சாதிவாரி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக குடும்ப வருமானத்தை குறைத்தும் காட்டி முறைகேடுகளில் ஈடுபட்டு ஐஏஎஸ் ஆகியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவரை வேறு இடத்துக்கு மாநில அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டியை அமைத்தது.

    இதற்கிடையே பூஜா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்கக்கோரி நீதிமன்றத்தில் பூஜா முன்ஜாமீன் கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் யுபிஎஸ்சி முன் ஆஜராக மறுத்தத்ததாலும் அவர் மீது 30 புகார்கள் வரை இருப்பதாலும் பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் யுபிஎஸ்சியால் உத்ராவிடப்பட்ட தகுதிநீக்கம் ஒரு மாதம் கழித்து தற்போது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி பூஜா கெத்கரை ஐஏஎஸ் சேவையில் இருந்து நீக்கம் செய்து விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×