search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவசாயிகளின் பொறுமையை சோதித்தால்.. மேடையிலேயே மத்திய அமைச்சரை எச்சரித்த ஜெகதீப் தன்கர்
    X

    "விவசாயிகளின் பொறுமையை சோதித்தால்.." மேடையிலேயே மத்திய அமைச்சரை எச்சரித்த ஜெகதீப் தன்கர்

    • நமது கொள்கைகளை சரியான பாதையில் வகுக்கவில்லை என்பதை குறிக்கிறது.
    • பிரதமர் மோடிக்கு படம் பார்க்க நேரம் இருக்கிறது விவசாயிகளுடன் பேச நேரம் இல்லையா

    விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசை குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை நோக்கி ஜெகதீப் தன்கர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ள்ளார்.

    மேடையில் பேசிய ஜெகதீப் தன்கர் சிவராஜ் சிங் சவுகானை நோக்கி, வேளாண் அமைச்சரே, உங்களுக்கு முன் இருந்த வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஏதாவது வாக்குறுதி அளித்தாரா? வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த்த்தால், அது என்ன ஆனது?

    இது ஒரு தீவிரமான பிரச்சினை, விவசாயிகளின் பொறுமையை சோதிக்க கூடாது, அவர்களின் குரலை எந்த சக்தியாலும் அடக்க முடியாது. விவசாயிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்? ஏன் எந்த முயற்சியும் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது எனக்கு புரியவில்லை, இதுவே எனது கவலை .

    சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைத்ததற்கு இணையாக, விவசாயிகளின் கவலைகளை நீங்கள் நிவர்த்தி செய்யவேண்டும். நீங்கள் (சிவ்ராஜ் சிங் சவுகான்) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கிறீர்கள்.

    சர்தார் படேலையும், தேசத்தை ஒருங்கிணைக்கும் அவரது பொறுப்பையும் நான் நினைவுகூர்கிறேன், அதை அவர் சிறப்பாகச் செய்தார். இந்த சவால் இன்று உங்கள் முன் உள்ளது, மேலும் இது [விவசாயிகள் பிரச்சனை] இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காட்டிலும் குறைவாகக் கருதப்படக் கூடாது.

    இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது, ஏன் விவசாயி வேதனையில் உள்ளார், ஏன் அவர்கள் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இது மிகவும் தீவிரமான பிரச்சனை. இதை இலகுவாக எடுத்துக்கொள்வது நமது கொள்கைகளை சரியான பாதையில் வகுக்கவில்லை என்பதை குறிக்கிறது. ஒரு விவசாயியின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

    விவசாயிகள் போராட்டம்

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) சட்டப்பூர்வமாக்கக் கோரி பிப்ரவரி முதல் ஹரியானா-பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தின் அடுத்த கட்டமாக டெல்லி சலோ அணிவகுப்பு நடத்தி தலைநகர் நோக்கி வந்துகொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    நில இழப்பீடு மற்றும் இதர வாக்குறுதிகள் மீதான கோரிக்கைகள் ஏழு நாட்களுக்குள் நிறைவேற்றப்படாததால் டிசம்பர் 6 முதல் மீண்டும் டெல்லி நோக்கி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பிரதமர் மோடிக்கு பாராளுமன்ற வளாகத்தில் [சபர்மதி ரிப்போர்ட்] படம் பார்க்க நேரம் இருக்கிறது விவசாயிகளுடன் பேச நேரம் இல்லையா என்று உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெகதீப் தன்கர் தற்போது மத்திய அரசிடம் கேட்டுள்ள கேள்வியையே தாங்களும் தொடர்ந்து கேட்டு வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×