என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை ஆட்சியமைக்க வேண்டாம்- இந்தியா கூட்டணிக்கு இன்ஜினியர் ரஷீத் கோரிக்கை
- ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன
- ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.
ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.
அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பா.ஜ.க. வுக்கு கடந்த முறையைவிட (25) சற்று அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பி.டி.பி.-க்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றாலும், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி துருப்புச் சீட்டாக மாறக்கூடும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தாலும் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டாம் என்று எம்.பி. இன்ஜினியர் ரஷீத் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியா கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.), அப்னி கட்சி மற்றும் பிற கட்சிகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். எதாவது ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தாலும், மற்ற அனைத்து கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு தர எங்களது அவாமி இத்தேஹாத் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் எம்.பியுமான ஷேக் அப்துல் ரஷீத் என்கிற இன்ஜினியர் ரஷீத் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்