search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இந்து அமைப்பு  மிரட்டல்.. பெண்ணின் சாட்சியை மீறி லவ் ஜிகாத் பெயரில் முஸ்லீம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
    X

    இந்து அமைப்பு மிரட்டல்.. பெண்ணின் சாட்சியை மீறி 'லவ் ஜிகாத்' பெயரில் முஸ்லீம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

    • உள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன்
    • லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத்தை சுட்டிக்காட்டி பெண்ணின் சாட்சியையும் மீறி இளைஞருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரைலியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 வயது இந்து பெண்ணை காதலித்த திருணம் செய்த நபர் முஸ்லீம் என்று பின்னரே தெரியவந்தது என்றும் அவர் ஏமாற்றப்பட்டதாகவும் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையில் தோன்றிய அந்த பெண் புகாரில் கூறப்பட்டது உண்மைதான் என்று கடந்த ஜூலை 31 ஆம் தேதி சாட்சி சொல்லியிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையிலிருந்த நிலையில் தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் தோன்றிய அந்த பெண், தஉள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன் பிறழ் சாட்சியம் வழங்கியுள்ளார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி ரவிக்குமார் திவாகர் லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி ரவிக்குமார் கடந்த 2022 இல் ஞானவாபி மசூதியில் இந்து கோவில் இருபதுகுறித்து ஆய்வு நடந்த தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×