search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    விண்வெளி துறையில் தொழில்நுட்ப பயிற்சி-  இஸ்ரோ நடவடிக்கை
    X

    இஸ்ரோ பணியாளர்கள் (கோப்பு படம்)

    விண்வெளி துறையில் தொழில்நுட்ப பயிற்சி- இஸ்ரோ நடவடிக்கை

    • தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பெங்களூரு, மும்பை மற்றும் திருவனந்தபுரம் மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    விண்வெளித் துறையில் தொழில்நுட்பப் பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் (இஸ்ரோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன் அடிப்படையில் இஸ்ரோ தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டது.

    இதன் மூலம் விண்வெளித்துறைக்கு தேவையான புதுமையான நடைமுறை திறன்களை அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெங்களூரு, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள தேசிய திறன் பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    5 நாட்களில் 20 பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தேசிய திறன் பயிற்சி மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரோ தொழில்நுட்பப் பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×