என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இலங்கைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
- இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
- வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ விரும்புகிறோம் என தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ள பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தனர். இதையடுத்து பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றமானது மற்றும் சிக்கலானது. இந்தியாவின் அண்டை நாட்டினர் என்பதனால் இலங்கை மக்களுக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ நாம் விரும்புகிறோம் என தெரிவித்தார்.