search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் சம்பாய் சோரன்
    X

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் சம்பாய் சோரன்

    • சம்பாய் சோரன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஏற்கனவே ஆளுநரிடம் வழங்கிவிட்டார்.
    • பதவி ஏற்ற 10 நாட்களில் பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து சம்பாய் சோரன் ஆளுநரிடம் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு உள்ளது. அதனால் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமைக் கோரினார்.

    ஆனால் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க அழைக்காமல் இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில் சம்பாய் சோரனை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து இன்று சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உளளார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்கும்போது, அவருடன் பலர் மந்திரிகளாக பதவி ஏற்கலாம் எனத்தெரிகிறது.

    இது தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலளார் கூறுகையில் "பதவி ஏற்க சம்பாய் சோரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் தேதி தெரிவிக்க வேண்டும்" என்றார்.

    பதவி ஏற்ற நாளில் இருந்து 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×