search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமரின் கொள்கையை மீண்டும் அங்கீகரித்த மகாராஷ்டிரா மக்கள்: ஜே.பி.நட்டா பெருமிதம்
    X

    பிரதமரின் கொள்கையை மீண்டும் அங்கீகரித்த மகாராஷ்டிரா மக்கள்: ஜே.பி.நட்டா பெருமிதம்

    • 2019-லும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் விரும்பினர்.
    • ஆனால் அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே நம்மை ஏமாற்றினார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேலும், பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஏராளமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் இந்திய மக்களும், மகாராஷ்டிரா மக்களும் மீண்டும் பிரதமரின் கொள்கையை அங்கீகரிக்கிறோம் என்ற செய்தியை நாடு முழுதும் அனுப்பி உள்ளனர்.

    இதற்காக நான் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்ற மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியையும் இந்த தேர்தல் அளித்துள்ளது.

    சாதி, அரசியல் சாசனம், மதம் ஆகியவற்றின் பெயரால் மக்களைப் பிரித்து அதிகாரத்தைப் பெறுவோம் என்ற மாயை இந்தியா கூட்டணிக்கு சில காலமாகவே இருந்தது.

    2019-லும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் விரும்பினர். அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே நம்மை ஏமாற்றினார்.

    ஆனால் பிரதமர் மோடி, மஹாயுதி, பா.ஜ.க. மற்றும் சிவசேனா ஆகிய கட்சிக்கு ஆதரவாக உள்ளதாக மகாராஷ்டிரா மக்கள் காட்டி உள்ளனர் என தெரிவித்தார்.

    Next Story
    ×