search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவாலின் அரசியல் கணக்கு.. ராஜினாமா கார்டை மீண்டும் கையில் எடுத்தது ஏன்? - ஒரு அலசல்
    X

    கெஜ்ரிவாலின் அரசியல் கணக்கு.. ராஜினாமா கார்டை மீண்டும் கையில் எடுத்தது ஏன்? - ஒரு அலசல்

    • 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
    • 2013 டிசம்பரில் முதல்வரான கெஜ்ரிவால் 2014 பிப்ரவரியில் பதவியை ராஜினாமா செய்தார்

    ?எம்.எல்.ஏ கெஜ்ரிவால்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 6 மாத திகார் சிறைவாசத்தின் பின் ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அம்மாநில கல்வி அமைச்சர் அதிஷி முதலமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். இதன்படி கெஜ்ரிவால் தனத்துக்கு எதிரான ஊழல் வழக்கை முதல்வராக அன்றி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவாக எதிர்கொள்ள உள்ளார்.

    தலைநகரும் அரசியல் சதுரங்கமும்

    தலைநகர் டெல்லிக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதை முன்கூட்டியே வரும் நவம்பர் மாதம் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுடன் நடந்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். அன்னா ஹசாரேவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு 2012 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய கெஜ்ரிவால் சுமார் 10 வருட காலமாக டெல்லியில் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகளில் நாற்காலி கனவை கனவாகவே நிருத்தி வைத்துள்ளார்.

    கெஜ்ரிவால் ராஜினாமா மூலம் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்துவது இது முதல் முறை அல்ல. ஒரு புதிய கட்சியாக பழம்பெரும் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தேசத்தின் தலைநகரில் ஆட்சியைப் பிடிப்பதை அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசியல் நகர்வுகள் மூலம் சாத்தியமாகிக் காட்டினார்.

    கெஜ்ரிவாலின் அரசியல் கணக்கு

    6 மாத காலமாகச் சிறைக்குள் இருந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக தொடராமல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் அப்போதெல்லாம் அன்றி தற்போது ஜாமீனில் வெளி வந்த 2 நாட்களுக்கு உள்ளாகவே ராஜினாமா செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளதற்குப் பின்னால் அரசியல் இல்லாமலில்லை.

    ஜனாதிபதி ஆட்சி, ஊழல் முதல்வர் என பாஜக பயன்படுத்தி வந்த அத்தனை கார்டுகளையும் மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று சூளுரைத்து ராஜினாமா என்ற ஒரே கார்டில் தவிடுபொடி ஆக்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    2013 இல் முதல்முறையாக பாஜகவின் டெல்லி கனவுக்கு நடுவே கெஜ்ரிவால் முட்டுக்கட்டையாக வந்தார். 15 வருட காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு ஆட்சி அமைக்க காத்திருந்த பாஜகவின் கனவு 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் ஆம் ஆத்மி 28 தொகுதிகளைக் கைப்பற்றித் தொங்கு சட்டசட்ட சபை அமைத்ததன் மூலம் தகர்ந்தது. ஆளுநர் அழைப்பு விடுத்தும் ஸ்திரத்தன்மை இல்லாததால் ஆட்சி அமைக்க பாஜக பயந்தது.

    காங்கிரசின் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சேர்ந்து டெல்லியில் முதல்முறையாக ஆட்சியமைத்து முதல்வர் ஆனார் கெஜ்ரிவால். ஆனால் அந்த அரசு 49 நாட்கள் மட்டுமே நீடித்தது. டிசம்பர் 30 2013 இல் முதல்வரான கெஜ்ரிவால் பிப்ரவரி 2014 இல் பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை ஆம் ஆத்மி வலியுறுத்தியதால் பாஜக மற்றும் காங்கிரஸ் தங்களை எதிர்ப்பதாக தனது ராஜினாமா உரையில் கெஜ்ரிவால் தெரிவித்தார். இதன்பின் டெல்லி தற்காலிகமாக மத்திய காட்டுப்பாட்டின்கீழ் வந்தது.

    மீண்டும் தேர்தல்

    இதன்பின் மீண்டும் தேர்தல் நடந்த வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்து வந்தது. எனவே சரியாக ஒரு வருடம் கழித்து 2015 ஆம் ஆண்டு மீண்டும் வந்தது தேர்தல். இதில் டெல்லி கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தது. அதுவும் 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதற்கு கெஜ்ரிவால் பாஜகவுக்கு பதவியை பொருட்படுத்தாமல் ராஜினாமா செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றதே காரணம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் பாஜகவின் கனவு மீண்டும் சிதறியது. தொடர்ந்து 2020 இல் நடந்த தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தார் கெஜ்ரிவால்.

    மீண்டும் ராஜினாமா

    இந்த நிலையில்தான் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கு ஆம் ஆத்மி மீது விடிந்தது. மணீஷ் சிசோடியா முதலில் சிறை சென்றார்.தொடர்ந்து கடந்த மார்ச் 21 அன்று கெஜ்ரிவாலும் கைதானார் இந்நிலையில் மீண்டும் ராஜினாமா அஸ்திரத்தை கெஜ்ரிவால் கையில் எடுத்துள்ளதால் அவரை முன்னிறுத்தி ராஜினாமா செய்யாத ஊழல் முதல்வர் என வர இருக்கும் தேர்தலில் பாஜக முத்திரை குத்த வழி இல்லாமல் ஆகியுள்ளது. அதற்கு பதிலாக ஆக்ஸ்போர்டில் படித்த நிர்வாகத் திறன் வாய்ந்த முதல்வர் என்ற அதிஷியின் பிம்பம் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கை கொடுக்கும். மேலும் ஊழல்வாதி என்ற பிம்பத்தில் இருந்து குறிவைக்கப்பட்டவர் என்ற பிம்பத்துக்கு கெஜ்ரிவால் டிரான்சிஷன் ஆவதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×