search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சட்டம் ஒழுங்கு மொத்தமாக  சீர்குலைந்துவிட்டது.. பாபா சித்திக் கொலைக்கு ராகுல் காந்தி கண்டனம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சட்டம் ஒழுங்கு மொத்தமாக சீர்குலைந்துவிட்டது.. பாபா சித்திக் கொலைக்கு ராகுல் காந்தி கண்டனம்

    • 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கட்சி மாறினார்
    • பாபா சித்திக்கின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

    பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலைக்கு மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    பாபா சித்திக் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாபா சித்திக்கின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதை இந்த கொடூர சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×