என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நீட் சர்ச்சை: நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரி மாணவர்கள் பிரிவு அழைப்பு
- தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக்கானதாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
- 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு மற்றும் முடிவு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இடதுசாரி மாணவர்கள் பிரிவான, அனைத்து இந்திய மாணவர்கள் சங்கம் (AISA) நாடு தழுவிய இரண்டு நாள் (ஜூன் 19 மற்றும் ஜூன் 20) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
2024 நீட் தேர்வை ரத்து செய்யும்படி 20 மாணவர்கள் ஒன்றாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், சிபிஐ அல்லது தன்னிச்சதிகாரம் பெற்ற சுதந்திரமான அமைப்பு உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.