என் மலர்
இந்தியா

மகாராஷ்டிரா: 48 பேர் அடங்கிய காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு
- மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
- மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ஆகியவை தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதற்கிடையே, உத்தவ் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக 65 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் முதல் கட்ட 48 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
மாநில தலைவர் நானா படோலே சகோலி தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவரான விஜய் வடேடிவார் பிரம்மபுரி தொகுதியிலும், முன்னாள் முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான் கரோட் தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.






