search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்காளத்தைப் பிரிப்பதற்கு  எதிராக  தீர்மானம்  நிறைவேற்றிய மம்தா..  பா.ஜ.க. சொல்வது என்ன?
    X

    மேற்கு வங்காளத்தைப் பிரிப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய மம்தா.. பா.ஜ.க. சொல்வது என்ன?

    • இந்துக்களுக்கு ஆபத்து, எனவே மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது
    • 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்'

    வங்காள தேச அகதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களைப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க பக்கம் இருந்து அழுத்தம் வரத் தொடங்கியுள்ளது.

    கடந்தவாரம் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின்போது பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே வங்காளதேச இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைவதால் இந்துக்களுக்கு ஆபத்து என்றும் எனவே அவர்கள் நுழையும் வழிகளாக உள்ள மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த நிலையில்தான், நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தைப் பிரிக்கும் முயற்சிகளுக்கு [attempt to divide the state] எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

    நேற்று இந்த தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசிய மம்தா, 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில் தற்போது மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஊடுருவல் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாவும் நேற்று பேசியிருந்தார். மேலும் மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, வங்காள தேசத்திலிருந்து 1 கோடி இந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் நுழைவார்கள் என்று பேசி சர்ச்சையைக் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×