என் மலர்tooltip icon

    இந்தியா

    காத்திருந்து... காத்திருந்து... : மணிப்பூர் செல்லாத பிரதமரை சாடிய காங்கிரஸ்
    X

    காத்திருந்து... காத்திருந்து... : மணிப்பூர் செல்லாத பிரதமரை சாடிய காங்கிரஸ்

    • அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு தொடங்கியது.
    • இந்த மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் மோடி அசாம் சென்றுள்ளார்.

    புதுடெல்லி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் மோடி அசாம் சென்றுள்ளார்.

    இந்நிலையில், அசாம் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

    இதுதொடர்பாக், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மீண்டும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். கவுகாத்தி சென்று அங்கேயும் ஒரு இரவைக் கழித்தார். ஆனால் அருகில் உள்ள மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை.

    தற்போது ஜனாதிபதி ஆட்சியில் உள்ள நிலையில் இது மேலும் குழப்பமாக உள்ளது.

    கடந்த இருபத்தி ஒரு மாத காலமாக மணிப்பூர் மக்கள் இவ்வளவு துயரங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

    இப்படி வேதனைகள், துன்பங்களை அனுபவித்து வரும் மணிப்பூர் மக்களை மோடி அவர்கள் நேரடியாகச் சென்று பார்ப்பது எப்போது? அவர்கள் காத்திருந்து, காத்திருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×