என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![கம்மியான சிபில் ஸ்கோர்.. கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார் - மணமகன் அதிர்ச்சி கம்மியான சிபில் ஸ்கோர்.. கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார் - மணமகன் அதிர்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9116904-mm1-removebg-preview1.webp)
கம்மியான சிபில் ஸ்கோர்.. கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார் - மணமகன் அதிர்ச்சி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார்.
- அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்று கேட்டார்.
சிபில் [CIBIL] ஸ்கோர் என்பது நபரின் கடன் பின்னணியைக் குறிக்கும் எண் முறை ஆகும். அவர் கடன் பெறுவதற்குத் தகுதியானவரா என்பதை அவரின் சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் முடிவு செய்யும்.
இந்நிலையில் சிபில் ஸ்கோர் காரணமாக மகாராஷ்டிராவில் திருமணம் ஒன்று கடைசி நேரத்தில் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் முர்திசாபூரை சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார். இதன்மூலம் மணமகன் பல கடன் வாங்கி உள்ளதும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதும் தெரியவந்தது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள ஒருவருக்கு ஏன் தங்கள் குடும்ப பெண்ணை தர வேண்டும் என்றும் அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்றும் உறவினர் கேள்வி எழுப்பினார்.
இதனை பெண் வீட்டார் அனைவரும் ஏற்றுக்கொண்டு தங்கள் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக திருமணத்தை நிறுத்தினர்.
ஜாதக பொருத்தம், மன பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கும் காலம் மாறி சிபில் [CIBIL] ஸ்கோரை பார்த்து பெண் தரும் காலம் வந்துவிட்டதாக நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர்.