என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இலங்கை மக்களுக்கு துணை நிற்போம் - இந்திய வெளியுறவுத்துறை
- கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
புதுடெல்லி:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.
போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் அந்நாட்டு மக்களுடன் இந்தியா துணை நிற்கும். இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது. இலங்கையில் நெருக்கடி சூழலை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.