search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மிலிந்த் தியோரா விலகலால் காங்கிரஸ்-க்கு எந்த பாதிப்பும் இல்லை - ஜெயராம் ரமேஷ்
    X

    "மிலிந்த் தியோரா விலகலால் காங்கிரஸ்-க்கு எந்த பாதிப்பும் இல்லை" - ஜெயராம் ரமேஷ்

    • ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
    • முதலமைச்சர் ஏக்நாட் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாட் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து கூறிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருந்தார். ஒரு மிலிந்த் தியோரா வெளியேறினால், லட்சக்கணக்கான மலிந்த் தியோராக்கள் எங்களுடன் வந்து சேர்வார்கள். காங்கிரஸை இது எந்த வகையிலும் பாதிக்காது என தெரிவித்துள்ளார்.

    மிலிந்த் தியோராவின் விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித்தின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தீப் திக்ஷித், "மிலிந்த் தியோராவைப் போன்ற ஒருவர் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவின் கூட்டணிக் கட்சியில் இணையப்போவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. மனிதனுக்கு இரண்டு பெரிய பலவீனங்கள் இருக்கின்றன. பயமும், பேராசையுமே அவை" என தெரிவித்தார்.

    Next Story
    ×