search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அந்தேரி தொகுதி இடைத்தேர்தல் - பா.ஜ.க.  போட்டியிட வேண்டாம் என ராஜ் தாக்கரே கோரிக்கை
    X

    ராஜ் தாக்கரே

    அந்தேரி தொகுதி இடைத்தேர்தல் - பா.ஜ.க. போட்டியிட வேண்டாம் என ராஜ் தாக்கரே கோரிக்கை

    • அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

    மும்பை:

    ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள கடிதத்தில், மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தலில் நவநிர்மாண் சேனா போட்டியிடாது. எனவே நீங்களும் இடைத்தேர்தலில் ருதுஜா லட்கேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மறைந்த ரமேஷ் லட்கேவின் அரசியல் பயணம், வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×