என் மலர்
இந்தியா

11 வயது மகளின் கண்முன்னே தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்.. பண்ணை வீட்டில் பயங்கரம்
- தனது 11 வயது மகளுடன் பண்ணை வீட்டின் வராண்டாவில் பெண் தூங்கிக்கொண்டுருந்தார்.
- குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த தர்மேந்திரா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியத் தலைநகர் டெல்லி, ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் பராமரிப்பாளராக இருந்த 37 வயது பெண் தனது மகளின் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த தர்மேந்திரா (35) என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி, நள்ளிரவில் தனது 11 வயது மகளுடன் பண்ணை வீட்டின் வராண்டாவில் பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்த தர்மேந்திரா சுவர் ஏறிக் குதித்துள்ளான்.
பெண் மற்றும் அவரது மகளின் கை, கால்களைக் கட்டிபோட்டுவிட்டு, சிறுமியின் கண்முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.
தனக்கு நேர்ந்தது குறித்து அப்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்மேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.






