search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ம.பி. முதல்வர் மோகன் யாதவ் உடன் YouTube Vlog செய்த 12 வயது சிறுமி
    X

    ம.பி. முதல்வர் மோகன் யாதவ் உடன் YouTube Vlog செய்த 12 வயது சிறுமி

    • முதல்வர் மோகன் யாதவ் தனது இல்லத்தில் நடத்திய வட்டமேஜை கூட்டத்தின் போது வீடியோ எடுக்கப்பட்டது.
    • சிறுமி முதல்வர் யாதவை "ராம் ராம் முக்யமந்திரி ஜி" என்று வாழ்த்துவதுடன் உரையாடலை தொடங்குகிறார்.

    மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பண்டேலி பேச்சுவழக்கில் சமூக ஊடகங்களில் பிரபலமான 12 வயது சிறுமி நடத்திய நகைச்சுவையான உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சமீபத்தில் போபாலில் உள்ள முதல்வர் இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு சிறுமிக்கு கிடைத்துள்ளது. பெரிய பங்களா மற்றும் ஏரிக் காட்சியில் மயங்கிய சிறுமி வீடியோவைத் தொடங்கும் போது, முதல்வர் மாளிகைக்கு தனது முதல் வருகையின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து முதல்வர் மோகன் யாதவ் தனது இல்லத்தில் நடத்திய வட்டமேஜை கூட்டத்தின் போது வீடியோ எடுக்கப்பட்டது.

    அப்போது, சிறுமி முதல்வர் யாதவை "ராம் ராம் முக்யமந்திரி ஜி" என்று வாழ்த்துவதுடன் உரையாடலை தொடங்குகிறார். அப்போது அங்குள்ளவர்கள் சிரிக்கின்றனர். என்னை இதற்கு முன்பு பார்த்தீர்களா? என்று சிறுமி கேட்க, அதற்கு முதல்வர் "ஹம் ஆப்கோ தேக் கே தர் லக் ரஹா ஹை" (இப்போது எனக்கு பயமாக இருக்கிறது) என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

    முதல்வரிடம் அவரது பிரமாண்டமான பங்களாவால் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லும் சிறுமி, இது போன்ற எதையும் தான் பார்த்ததில்லை என்று வியப்பில் கூறுகிறார். தொடர்ந்து தனது வீடியோவை யூடியூபராக விரும்பி பகிருமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளுமாறு முதலமைச்சரிடம் கேட்டார். தொடர்ந்து யூடியூப்-க்கு லைக் பண்ணுங்க, ஷேர் செய்யுங்கள்... சர்ப்ஸ்கிரைப் பண்ணுங்க என்று கூறுகிறார்.

    தயக்கமோ, அச்சமோ சிறிதும் இல்லாமல் 12 வயது சிறுமி முதல்வர் மற்றும் அவருடைய சகாக்கள் இருக்கும் கூட்டத்தில் சரளமாக பேசியதும், சிறுமி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மோகன் யாதவும் மிகவும் ஜாலியாக சிரித்தபடியே பதில் அளித்ததும் பார்ப்பவரை மகிழ செய்துள்ளது.



    Next Story
    ×