என் மலர்
இந்தியா
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவிற்கு 79 ஆயிரம் புள்ளிகளை கடந்து உச்சம்
- நேற்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
- இன்று அதையும் தாண்டி 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இதுதான் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக இருந்தது.
இந்த நிலையில் இன்று 79 ஆயிரத்தை கடந்த 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி இது இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று சென்செக்ஸ் 78,674.25 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 78,758.67 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய வர்த்தகம் முடிவடைவதற்கு சற்றுமுன் 3.15 மணியளவில் 79,396.03 புள்ளிகளை எட்டியது. அதன்பின் சற்று குறைந்து 79,243.18 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று குறைந்த பட்சமாக 78,467.34 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
நிஃப்டி
அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இன்று இதுவரை இல்லாத வகையில் 24,087.45 புள்ளிகளை எட்டி வர்த்தகம் ஆனது. நேற்று 23,868.80 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,881.55 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய குறைந்த வர்த்தகம் 23,805.40 புள்ளிகள் ஆனது.
மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.
வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.