search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.1 லட்சத்துக்கான கேரண்டி அட்டையுடன் காங்கிரஸ் அலுவலகத்தில் குவிந்த முஸ்லிம் பெண்கள்
    X

    ரூ.1 லட்சத்துக்கான கேரண்டி அட்டையுடன் காங்கிரஸ் அலுவலகத்தில் குவிந்த முஸ்லிம் பெண்கள்

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
    • காங்கிரஸ் வென்றால் ஏழைப் பெண்களுக்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்திருந்தார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றால் ஏழைப் பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்திருந்தார். மாதா மாதம் பெண்களுக்கு 8,500 ரூபாய் அவர்களின் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரபிரேதச மாநிலம் லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று ஏராளமான முஸ்லீம் பெண்கள் திரண்டனர். அவர்கள் கையில் 1 லட்ச ரூபாய்க்கான கேரண்டி கார்டு உடன் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த உத்தரவாத அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு ரசீது கிடைத்ததாக சில பெண்கள் தெரிவித்தனர்.

    தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் 1 லட்சம் பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது இந்தியா கூட்டணி வென்றுள்ளதால், இந்த உத்தரவாத அட்டையை சமர்ப்பிக்க வந்துள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×