என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற சிறைக்கு செல்வேன்: கெஜ்ரிவால் ஆவேசம்
- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
- டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி:
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகாத நிலையில் கெஜ்ரிவால் வீட்டுக்கு சோதனை வாரண்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. 31ம் தேதி சிறைக்கு திரும்ப வேண்டும் என கூறியது.
இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சுப்ரீம் கோர்ட் எனக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. நாளை 21 நாட்கள் நிறைவடைய உள்ளது. நாளை மறுநாள் சரணடைய வேண்டும். நாளை மறுநாள் மீண்டும் திகார் சிறைக்குச் செல்வேன்.
இந்த முறை எவ்வளவு காலம் சிறையில் அடைப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் என் உள்ளம் உயர்ந்தது. சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் சிறைக்கு செல்கிறேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.