என் மலர்
இந்தியா
X
மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- இந்தியா கூட்டணி முடிவு
Byமாலை மலர்9 Dec 2024 5:33 PM IST
- அமெரிக்காவின் ஜார்ஜ் சோரோஸ் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு என பாஜக குற்றச்சாட்டு.
- எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
மாநிலங்களவை தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜ் சோரோஸ் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்திய பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Next Story
×
X