search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    patanjali non veg
    X

    பதஞ்சலி பல் பொடியில் அசைவ பொருட்கள்? - டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

    • பதஞ்சலி பல்பொடியில் Sepia Officinalis எனும் கணவாய் மீன் சேர்க்கப்படுவதாக Ingredientsல் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • அசைவ பொருளை சைவ பொருள் என தவறாக விளம்பரப்படுத்திய பதஞ்சலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சைவத்தை குறிக்கும் பச்சை நிற குறியீட்டுடன் விற்கப்படும் பதஞ்சலி நிறுவனத்தின் பல் பொடியில் அசைவ பொருள் சேர்க்கப்படுவதாக வழக்கறிஞர் யதின் சர்மா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அவரது மனுவில், "எனது குடும்பத்தினர் சைவ பொருட்களால் உருவாக்கப்பட்டது என நினைத்து பதஞ்சலி நிறுவனத்தின் பல் பொடியை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த பல்பொடியில் Sepia Officinalis எனும் கணவாய் மீன் சேர்க்கப்படுவதாக Ingredientsல் குறிப்பிட்டுள்ளதை எங்கள் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.

    எங்கள் பிராமண குடும்பத்தில் அசைவ உணவு உட்கொள்வது மத கோட்பாடுகளுக்கு எதிரானது. இது எங்களை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. ஆகவே அசைவ பொருளை சைவ பொருள் என தவறாக விளம்பரப்படுத்திய பதஞ்சலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று பதஞ்சலியின் திவ்யா பார்மசிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    Next Story
    ×