என் மலர்
இந்தியா
X
பொங்கல் அன்று நடக்க இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Byமாலை மலர்13 Jan 2025 8:11 PM IST (Updated: 13 Jan 2025 8:12 PM IST)
- யுஜிசி நடத்தும் நெட் தேர்வு ஒத்திவைக்கப்பு.
- ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் தேர்வில் மாற்றமில்லை.
பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேதியில் நடைபெற இருந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்வு அதே தேதியில் மாற்றமின்றி நடைபெறும்.
Next Story
×
X