என் மலர்
இந்தியா
திரவுபதி முர்முவுடன், ஓபிஎஸ், எல்.முருகன் சந்திப்பு
- திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கலின்போது ஓ.பி.எஸ், தம்பிதுரை பங்கேற்றனர்
- எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு நேற்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேட்புமனுதாக்கலின்போது அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணித்து ஆதரவு தெரிவித்தார். இதேபோல் மத்திய இணை மந்திரி எல் முருகனும் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி., ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.