search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலக்காடு அருகே கோவிலில் திருமணம் செய்து கொள்ள திருநங்கை ஜோடிக்கு அனுமதி மறுப்பு
    X

    திருமணம் செய்து கொண்ட ஆத்மிகா- நீலம் கிருஷ்ணா

    பாலக்காடு அருகே கோவிலில் திருமணம் செய்து கொள்ள திருநங்கை ஜோடிக்கு அனுமதி மறுப்பு

    • 2 பேரும் தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
    • நண்பர்கள் உதவியுடன் மண்டபத்தில் திருமணம் நடந்தது.

    பாலக்காடு :

    திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நீலம் கிருஷ்ணனா(வயது 31). இவர் பெண்ணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர். அதே பகுதியை சேர்ந்தவர் ஆத்மிகா(25). இவர் ஆணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்.

    இவர்கள் 2 பேரும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று பாலக்காடு அருகே காலாங்குறிச்சி பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதியும் பெற்று இருந்தனர். ஆனால் திடீரென நேற்று முன்தினம் அனுமதி இ்ல்லை என்று கோவில் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனினும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்த அவர்கள், தங்களது நண்பர்கள் உதவியுடன் அங்குள்ள ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்தனர். தொடர்ந்து அந்த மண்டபத்தில் அவர்களுக்கு நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. கடைசி நேரத்தில் கோவிலில் திருமணம் நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

    Next Story
    ×