search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போபால்-டெல்லி வந்தே பாரத் ரெயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி- மாணவர்களுடன் கலந்துரையாடல்
    X

    போபால்-டெல்லி வந்தே பாரத் ரெயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி- மாணவர்களுடன் கலந்துரையாடல்

    • இந்த வந்தே பாரத் ரெயில் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.
    • விழாவில் ரெயில்வே மந்திரி, மத்திய ஆளுநர், முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் போபால் வந்துள்ள பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து டெல்லி-போபால் இடையேயான நாட்டின் 11-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய பிரதேச ஆளுநர் மங்கு பாய் பட்டேல், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ரெயில்வே துறையில் மாற்றங்கள் செய்வதுடன், மக்களுக்கு ஏதுவான பயண வசதிகளை ஏற்படுத்துவதே தனது அரசின் நோக்கம் என்றார்.

    பின்னர் வந்தே பாரத் ரெயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தபடி, உடன் பயணித்த பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். ரெயில் பணியாளர்களிடமும் உரையாடினார்.

    இந்த வந்தே பாரத் ரெயில், போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரெயில் நிலையம் முதல் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட உள்ளது. சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×