என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆதிவாசிகள் முன்னேற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு
- சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
- நாடு செழிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
விவசாயிகளுக்கு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் எங்கள் அரசு அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. எங்கள் தேர்தல் வாக்குறுதி மாநில வளர்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும்.
சுதந்திரத்திற்குப் பிறகு, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் முன்னேற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் விரும்புகிறது.
சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது. நாடு செழிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள். மாநில வளர்ச்சிக்கு மகா விகாஸ் அகாடி கட்சியினர் தடையாக இருக்கிறார்கள்.
பா.ஜ.க அரசு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள் என தெரிவித்தார்.