search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்வதேச யோகா தினம்: காஷ்மீர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
    X

    சர்வதேச யோகா தினம்: காஷ்மீர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

    • 10-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி முதல் முறை காஷ்மீர் செல்கிறார்.

    ஸ்ரீநகர்:

    பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

    இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, 10-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர் என கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    3-வது முறை பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×