என் மலர்
இந்தியா

விசாகப்பட்டினத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு
- ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கிறார்.
- ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை விசாகப்பட்டினம் வந்தார். விமானம் மூலம் வந்த அவரை ஆளுநர் அப்துல் நசீர், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் மூவரும் வாகனத்தில் ஏறி விழா நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அப்போது இருபுறமும் மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மூவரும் மக்களை நோக்கி கையசைத்தபடி சென்றனர். இந்த ரோடு ஷோ சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் வரை நடைபெற இருக்கிறது.
பிரதமர் மோடி அனக்காபள்ளி மாவட்டம், அச்சுதாபுரம் அருகே ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கிறார்.
ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட 6 சாலைகள் மற்றும் ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.






