search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ: மார்ச் 6 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
    X

    முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ: மார்ச் 6 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

    • 520 மீட்டர் நீளத்திற்கு ஹூக்ளி நதியின் கீழே இந்த சுரங்கப் பாதை அமைகிறது
    • செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா நகரை 27 நிமிடத்தில் அடைந்து விடலாம்

    மெட்ரோ ரெயில் சேவை திட்டங்களில் ஒன்றாக இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ பாதையை, கொல்கத்தாவில், பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 6 அன்று தொடங்கி வைக்கிறார் என இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    நதிக்கு அடியில் ரெயில்களில் பயணிக்கும் புதிய அனுபவத்தை நாட்டிலேயே முதல் முறையாக, கொல்கத்தா நகர மக்கள் பெற உள்ளனர்.

    520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழே இந்த சுரங்க பாதை அமைகிறது.

    இந்த சுரங்கப்பாதையின் உள்-விட்டம் 5.55 மீட்டராகும்; வெளிப்புற விட்டம் 6.1 மீட்டராகும். ஹூக்ளி நதியில் 32 மீட்டருக்கு கீழே இதை உருவாக்கி உள்ளனர்.

    பயணிக்கும் போது சுமார் 1 நிமிடத்திற்கும் குறைவாகவே பயண நேரம் அமையும்.


    கொல்கத்தா மக்களுக்கு இது கணிசமாக பயண நேரத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது, கிழக்கு கொல்கத்தாவில் இருந்து செக்டார் வி (Sector V) எனும் இடத்திலிருந்து ஃபூல்பகன் (Phoolbagan) எனும் இடத்திற்கு இடைப்பட்ட 6.97 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ள பசுமை தட (Green Line) மெட்ரோ சேவை, இப்புதிய நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ சேவை தொடங்கப்பட்டதும், ஹூக்ளி நதியின் கீழே, செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா (Howrah) நகரை 27 நிமிடத்தில் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஹூக்ளி நதிக்கு 35 மீட்டருக்கு கீழே தடையில்லாத இணைய சேவை வழங்கப்படும் என இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் (Airtel) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சேவை நடைமுறைக்கு வந்ததும் இந்தியாவிலேயே ஆழமான மெட்ரோ சேவை தரும் ரெயில் நிலையமாக ஹவுரா ரெயில் நிலையம் உருப்பெறும். அத்துடன் ஒரு நதியின் கீழ் செயல்படும் முதல் மெட்ரோ சேவையாகவும் இது விளங்கும்.

    Next Story
    ×