search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பி.எஸ்.எல்.வி. திட்டத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்- இஸ்ரோ தலைவர்
    X

    பி.எஸ்.எல்.வி. திட்டத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்- இஸ்ரோ தலைவர்

    • ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
    • மிகவும் புதுமையான, செலவு குறைந்த செயல் விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு (டிச.30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    ஏவப்பட்ட ராக்கெட், ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறும்போது, "ஸ்பேடெக்ஸ் பணிக்காக பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. செயற்கைக்கோள்களை சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பி.எஸ்.எல்.வி. திட்டத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

    மேலும், ஸ்பேடெக்ஸ் குழு இரண்டு சிறிய செயற்கைக்கோள் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மிகவும் புதுமையான, செலவு குறைந்த செயல் விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.


    Next Story
    ×