search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் ஓவைசி சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-  ராஜ் தாக்கரே
    X

    ராஜ்தாக்ரே, அக்பரூதீன் ஓவைசி

    இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் ஓவைசி சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- ராஜ் தாக்கரே

    • நுபுர் சர்மாவை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
    • ஓவைசி மன்னிப்பு கேட்கும்படி யாரும் கேட்கவில்லை.

    மும்பை:

    தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுவெளியில் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக தற்போது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே களம் இறங்கி உள்ளார். மும்பையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது

    (முகமது நபிகள்) குறித்து நுபுர் சர்மா பேசியபோது, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அக்பரூதீன் ஓவைசி (இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர்) அவரது சகோதரர் ஜாகிர் நாயக். ஜாகிர் நாயக்கின் பேட்டியை யாரும் பார்க்கலாம், அவரும் அதையே சொன்னார். ஆனால் யாரும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை.

    இந்து கடவுள்களைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக அவர்கள் மீது இந்திய அளவில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? . அந்த இரண்டு ஓவைசி சகோதரர்கள் நமது (இந்து) கடவுள்களைப் பற்றி இழிவாக பேசுகிறார்கள், மேலும் நமது கடவுள்களுக்கு மோசமான பெயர்களை வைத்திருக்கிறார்கள். நமது கடவுள்கள் கேவலமானவர்களா? இதற்கு மன்னிப்பு கேட்கும்படி யாரும் அவரிடம் யாரும் கேட்கப் போவதில்லை. இவ்வாறு ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.

    Next Story
    ×