search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெப்ப அலை- டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்
    X

    வெப்ப அலை- டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

    • டெல்லியின் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
    • இமாச்சல பிரதேசம் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவும்.

    நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.

    டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். செவ்வாய்க்கிழமைக்கு பிறகு வெப்பத்தின் தீவிரம் குறையும்.

    இமாச்சல பிரதேசம் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவும்.

    மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரையிலும், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை வரையிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

    டெல்லி அசாதாரணமான வெப்ப அலையுடன் சிக்கித் தவிக்கிறது. வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, நகரம் முழுவதும் பருவகால சராசரியை விட அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×