என் மலர்
இந்தியா
பாராளுமன்ற தேர்தல்: பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு
- பீகாரில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணமான விளங்கியவர் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்.
பாட்னா:
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் முதன்மையான அணிகளாக உள்ளன.
இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணமான பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
இதையடுத்து ராஷ்டிரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் தற்போது காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்காக ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது.
இந்நிலையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் 26-ல் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.