search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் தாக்குதல்.. ஒருவர் பலி - 5 பேர் படுகாயம்
    X

    மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் தாக்குதல்.. ஒருவர் பலி - 5 பேர் படுகாயம்

    • இன்று காலை முதலே பிஷ்ணுபுர் மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
    • இந்த இடம் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தலைமையகம் அமைத்திருந்த இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    மணிப்பூர் முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான மைரேம்பாம் கொய்ரெங்[Mairembam Koireng] வீட்டின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 13 வயது சிறுமி உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை முதலே பிஷ்ணுபுர் மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மொய்ரங் [Moirang] மதியம் முன்னாள் முதல்வர் வீட்டு காம்பவுண்டுக்குள் ராக்கெட் பாய்ந்துள்ளது.

    இந்த இடம் இந்திய தேசிய ராணுவத்தில் தலைமையகம் அமைத்திருந்த இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இம்பாலில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதிகளிலிருந்து இந்த ராக்கெட்டுளை கிளர்ச்சிக்காரர்கள் ஏவி வருகின்றனர். மேலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பற்றமான சூழல் நிலவுகிறது.

    பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் முதல்வர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைரேம்பாம் கொய்ரெங் 1963 மற்றும் 1969 ஆகிய காலகட்டத்திற்கு இடையில் 3 முறை முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×