search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாபர் மசூதி விவகாரம்.. மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து வெளியேறிய சமாஜ்வாதி
    X

    பாபர் மசூதி விவகாரம்.. மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து வெளியேறிய சமாஜ்வாதி

    • மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி 46 இடங்களில் தான் வென்றது.
    • மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 3 வது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார். என்சிபி பிரிவு தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வர் ஆனார். கடந்த முறை முதல்வராக இருந்த சிவசேனா பிரிவு தலைவர் ஷிண்டே துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார்.

    288 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றிய நிலையில் எதிர்த்து போட்டியிட்ட மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] மொத்தமே 46 இடங்களில் தான் வென்றது.

    இந்நிலையில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி, "டிசம்பர் 6 அன்று, பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி அதன் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜகவுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாம் ஏன் அவர்களுடன் கூட்டணியில் இருக்க வேண்டும். ஆகவே மகா விகாஸ் அகாதி கூட்டணியில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×