என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கனமழை எதிரொலி - டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
- டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
- மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் பலர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி:
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 153 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் பலர் பலியாகி உள்ளனர். டெல்லியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 58 வயது நபர் உயிரிழந்தார்.
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மந்திரி அதிதி பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.