search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெரும் சரிவை சந்தித்த பங்கு சந்தை
    X

    பெரும் சரிவை சந்தித்த பங்கு சந்தை

    • ஜனவரி மாதம் சென்செக்ஸ் முதல்முறையாக 73 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
    • நேற்று இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

    இன்று, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி, 1000 புள்ளிகள் சரிந்து 70,419 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி 341 புள்ளிகள் சரிந்து 21,255 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    2024 ஜனவரி மாதம், சென்செக்ஸ், அதன் வரலாற்றில் முதல்முறையாக 73,000 புள்ளிகளை தொட்டது குறிப்பிடத்தக்கது.

    நேற்று (ஜனவரி 22) திங்கட்கிழமையாக இருந்தும், உத்தர பிரதேச மாநில அயோத்தியா நகரில், இந்துக்களின் கடவுளான பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    இதையொட்டி, நேற்று பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இம்மாதத்தின் முதல் சில நாட்களில் புதிய உச்சங்களை தொட்ட பங்கு சந்தை அதே நிலையில் நீடிக்க முடியாமல் தள்ளாடியது.

    ஜனவரி 23 செவ்வாய்கிழமையான இன்று பெரும் சரிவை சந்தித்தது.

    இம்மாதம், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த எஃப்ஐஐ (FII) எனும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீட்டை திரும்ப பெற்று கொண்டதன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    Next Story
    ×